2025 மே 08, வியாழக்கிழமை

பொலிஸார் மீது தாக்குதல்; நால்வர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 09 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம, அட்டுலுகம, மாராவ பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஜீப் வண்டியை வழிமறித்து பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும்  பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நான்கு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் ஆகியோர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X