Editorial / 2026 மார்ச் 20 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்தும், அதன் காரணமாக உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும் தற்போது விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எமது பாராளுமன்றத்திலும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலுக்கு இடமளிக்குமாறு முன்மொழிந்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த விவகாரத்தில் எமது அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு 'நடுநிலைத்தன்மை' என்பதாகும். எமது தாய்நாட்டின் கௌரவம், நீதி மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றை இந்த நடுநிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலமே நாம் உறுதிப்படுத்த முடியும். எத்தகைய அழுத்தங்கள் வந்தபோதிலும், இந்த நிலைப்பாட்டிலிருந்து நாம் பின்வாங்க மாட்டோம்.
ஈரானியக் கப்பல்கள் விவகாரத்தில், 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் மூன்று கடற்படைக் கப்பல்கள் மார்ச் மாதம் இலங்கைக்கு வர அனுமதி கோரின. அதே வேளையில், அமெரிக்காவும் தனது இரண்டு போர் விமானங்களை மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியது. அக்காலப்பகுதியில் போர் மோதல்களுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், எமது நடுநிலைத்தன்மையைப் பேணும் பொருட்டு இரண்டு தரப்பினருக்குமே நாம் அனுமதி வழங்கவில்லை. ஒரு தரப்பிற்கு மட்டும் அனுமதி வழங்கியிருந்தால், அது சர்வதேச ரீதியில் எமது நம்பகத்தன்மையைப் பாதித்திருக்கும்.
அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், மனிதாபிமான அடிப்படையில் நாம் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்:
மத்திய கிழக்கு போர்ச் சூழல் எமது பொருளாதாரத்தின் இரு முக்கிய தூண்களைப் பாதித்துள்ளது: எரிபொருள் விநியோகம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் வருமானம்.
எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க நாம் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளோம்:
1.டெண்டர் நடைமுறைகள்: 5 6 17 , .
2.மசகு எண்ணெய்: , . 12 .
3.விலை அதிகரிப்பு: , . 40% - 74% .
2025 ஆம் ஆண்டு எமது நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு திருப்புமுனை ஆண்டாகும்.
எரிபொருள், எரிவாயு மற்றும் கடவுச்சீட்டு விநியோகம் போன்ற துறைகளில் நீண்டகாலமாக நிலவி வந்த ஏகபோக முறைகளை (Cartels) நாம் முடிவுக்குக் கொண்டு வருகிறோம். அரசியல் அதிகாரத்தின் துணையுடன் இயங்கிய இந்த மாஃபியாக்கள் தற்போது பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்த முயல்கின்றன. எனினும், மக்களின் நலன் கருதி இந்த முறைகேடுகளை நாம் முற்றாக நிறுத்துவோம்.
எதிர்காலத்தில் போர் நீடித்தால் மேலும் சவால்கள் எழலாம். இருப்பினும், தடையற்ற வலுசக்தி விநியோகத்தையும், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பையும் உறுதிப்படுத்த அரசாங்கம் அனைத்து மாற்று நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. நாட்டு மக்கள் இக்கட்டான சூழலில் பொறுமையுடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
13 minute ago
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
3 hours ago