Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 நவம்பர் 27 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மஞ்சள் உற்பத்தியை அதிகரிப்பதாய் தெரிவித்து அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியை தடை செய்தது. இதனால், சொதிக்கு போடுவதற்குகூட மஞ்சள் இல்லை எனத் தெரிவித்த, ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட எம்.பியான ரோஹிணி கவிரத்ன, மஞ்சளுக்கு ஏற்பட்ட அதே கதிதான் மாதவிடாய் துவாய்க்கும், விரைவில் ஏற்படும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“மாதவிடாய் துவாய்களுக்கு 51 சதவீதம் வரி அறவிடும் இந்த அரசாங்கம் சிறுவர்கள், குழந்தைகளின் முதியோர், விசேட தேவையுடையவர்களின் மலசலத்துக்கும் வரி அறிவிடும் அரசாங்கமாக மாறியுள்ளது” என்றார்.
“மாதவிடாய் துவாய் என்பது அத்தியாவசிய பொருளே ஒழிய ஆடம்பரமான பொருள் அல்ல. 2018இல் மாதவிடாய் வரி 101.2 காணப்பட்ட நிலையில், நல்லாட்சி அதனை 40 சதவீதம் குறைத்து, பின்னர் 10 சதவீதம் குறைத்தது. ஆனால் இப்போதைய அரசாங்கம் தீர்வை வரிக்கு அப்பால் 15 வரி, 30 சதவீத சுங்கவரி, 2 சதவீதம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான வரி என 51 சதவீத வரியை அறவிடுகின்றது” என்றார்
மாதவிடாய் துவாய் மீதான வரி நல்லாட்சியில் குறைக்கப்பட்டதால் 4.2 சதவீதமான பெண்கள் பயனடைந்தனர். அதேபோல் இலங்கையில் மாதவிடாய் துவாய் 32 சதவீதம் பயன்படுத்துகின்றனர் எனத் தெரிவித்த அவர், ஏனைய அனைவரும் சுகாதாரமற்ற, பழைய முறையிலான, பாதுகாப்பற்ற முறையையே பயன்படுத்துகின்றனர். இதை பகிரங்கமாக கதைக்க வெட்கப்பட்டாலும் இதுதான் உண்மையான நிலைமையாகும்.
“எமக்கு சுகாதார பாதுகாப்பை விட தேசிய பாதுகாப்பே முக்கியம் என கதைக்கும் கொழும்பு- 7இல் உள்ள ராணிகளுக்கு இந்த விடயங்கள் தெரிவதில்லை. கிராமத்தில் துன்பபடும் பெண்களுக்குத்தான் வேதனை புரியும்” என்றார்.
இலங்கையில் உள்ள அனைத்து பெண்களும் வாங்கக் கூடிய வகையில் மாதவிடாய் துவாயைய் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பதை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், பல வருடங்களாக ஆசிரியராகக் கடமையாற்றயுள்ளேன். 50-60 சதவீதமான பெண் பிள்ளைகள் மாதவிடாய் காலங்களில் பாடசாலைகளுக்கு வருவதிவல்லை. காரணம் மாதவிடாய் துவாய் வாங்கும் அளவுக்கான பொருளாதார நிலை இவர்களின் பெற்றோருக்கு இல்லை என்றார்.
எனவே, இதனை புரிந்துகொண்டு மாதவிடாய் துவாய் மீதான வரியை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் எனக் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago