2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மரண தண்டனை: தமிழர்கள் ஏழுபேர் அடங்குகின்றனர்

Editorial   / 2018 ஜூலை 18 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போ​தைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக, 18 பேர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணமே, இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதில்,தமிழர்கள் ஏழுபேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளது.

2003ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன், 2007ஆம் தீர்ப்பளிக்கப்பட்ட வேலாயுதன் முரளிதரன், 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிவனேசன் ராஜா, 2012ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள எஸ். புண்ணியமூர்த்தி, எஸ்.கணேசன், மற்றும் 2013ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள டபிள்யு. விநாயக மூர்த்தி மற்றும் எஸ்.ஏ. சுரேஸ் குமார் ஆகியோரும்,  மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ள குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .