2025 மே 14, புதன்கிழமை

மஹிந்த - மைத்திரி கூட்டணியை பதிவு செய்ய நடவடிக்கை

Editorial   / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பினை பதிவு செய்ய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செயற்படவுள்ளனர். பொதுச்செயலாளராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் நோக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவை இணைந்து இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இதேவேளை, ஸ்ரீலங்கா நிதஹாஷ் பொதுஜன சந்தானய என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டணியின் கீழ், தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X