Editorial / 2019 செப்டெம்பர் 02 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சோலியின் அழைப்பை ஏற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, செப்டெம்பர் 02ஆம் திகதியான இன்று மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யூ.எல் - 101 விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் சற்று முன்னர் புறப்பட்டுச்சென்றனர்.
பிரதமருடன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தயா கமகே, அனோமா கமகே மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள், பல்வேறு துறைகளில் புதிய கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் இரு நாடுகளை பாதிக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago