2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மீண்டும் பாடசாலை ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் குறித்த தினத்தில் ஆரம்பமாகவுள்ளன.

இதனை, கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன், நான்கு கட்டங்களாக பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதற்கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக  ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாம் கட்டமாக, தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஜூலை 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

மூன்றாம் கட்டமாக ஜூலை 20ஆம் திகதி தரம்10 மற்றும் தரம் 12 மாணவர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளன.

நான்காம் கட்டமாக  3, 4, 6, 7, 8,மற்றும் 9 தர மாணவர்களுக்காக பாடசாலை ஜூலை 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

தரம் ஒன்று மாணவர்களுக்கு பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாடசாலை ஆரம்பமாகும் தினம்


ஜூன் 29ஆம் திகதி - ஆசிரியர், அதிபர்

ஜூலை 06ஆம் திகதி - தரம் 05 , 11, 13 மாணவர்கள்

ஜூலை 20ஆம் திகதி -தரம் 10 , 12 மாணவர்கள்

ஜூலை 27ஆம் திகதி -தரம் 3, 4, 6, 7, 8, மற்றும் தரம் 9  மாணவர்கள்

தரம் 01 மற்றும் 02 மாணவர்கள் தொடர்பில் தீர்மானம் இல்லை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X