2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

முக்கிய புள்ளியே புதிய எம்.பியாகிறார்

Gavitha   / 2020 நவம்பர் 03 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில், மாற்றமொன்று ஏற்படவிருப்பதாக வெளியான தகவல்களின் பிரகாரம் அந்த மாற்றம் இவ்வாரத்துக்குள் இட​ம்பெறக் கூடுமென அறியமுடிகின்றது.

அதற்காக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பி​யொருவர் தன்னுடைய எம்.பி பதவியை, இராஜினாமா செய்யவிருக்கின்றார். அது, இன்றையதினம் இடம்பெற கூடுமென அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவருடைய வெற்றிடத்துக்கே, புதியவர் எம்.பியாக பதவியேற்பார் என்றும் அதற்கான வழிவகைகளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தம் வழிவகுத்துவிட்டதென அறியமுடிகிறது. எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டதன் பின்னர், முக்கிய அமைச்சுப் பொறுப்பொன்று அவருக்கு வழங்கப்படவுள்ளதென அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

வழங்கப்படவிருக்கும் அமைச்சின் பிரகாரம், 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தையும், நாடாளுமன்றத்தில் அவரே சமர்ப்பிக்கக்கூடுமென அறியமுடிகின்றது.

இந்நிலையில், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல விவகாரம் சூடுபிடித்திருந்த போது, தன்னுடைய கட்சியின் தலைவரால் தாக்குதல்களுக்கு உள்ளானதாகக் கூறப்பட்டவரே இராஜினாமா செய்யவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .