2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’முடியாது என்ற வார்த்தை எமது அகராதியில் இல்லை’

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஜனாதிபதியான பின்னர் 365 நாட்களும் 24 மணித்தியாலங்களும் மக்களுக்கு சேவை செய்வேன்” என, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது பிரசாரக் கூட்டம்  கொழும்பு – காலி முகத்திடலில் இன்று (10) பிற்பகல் ஆரம்பமாகியது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் உரையாற்றுகையில், “இதுவரை நடைபெற்றிருக்காதவகையில், பாரிய அபிவித்தி யுகமொன்றை ஆரம்பித்து வைத்து, அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்ற நடவடிக்கை எடுப்போம்.

நாங்கள் உருவாக்கும் புதிய இலங்கைக்குள் எந்த வகையிலும், திருட்டு, மோசடி, ஊழலுக்கு இடமளிக்கப்படமாட்டாது. அரச சொத்துகளில் கைவைக்கப்பட மாட்டாது.

யாராவது நாட்டு சொத்துகளை கொள்ளையடிக்க எதிர்பார்த்திருந்தால், அவ்வாறானவர்கள் அரசாங்கத்தை அமைப்பதைவிட தற்போது வீட்டுக்கு செல்லுமாறு கூறுகின்றோம்.

எமது வரபிரசாதங்கள் தொடர்பில் நாங்கள் நினைப்பதில்லை. இல்லை, முடியாது என்ற வார்த்தைகளை எமது அகராதில் இருந்து அகற்றிவிடுவோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X