Editorial / 2020 பெப்ரவரி 05 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னறிவித்தல் இன்றி நாட்டின் பல பகுதிகளில், சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தியமை தொடர்பில் மின்சார சபையிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முதல் பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர, குறித்த அறிக்கையை கோரியுள்ளார்.
கெரவலப்பிட்டிய மின்நிலைய மின் பிறப்பாக்கியின் செயற்பாடுகளுக்கு போதுமானளவு எரிபொருள் இல்லாதமையால் மின்சார விநியோகத்தை துண்டித்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.
மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும். எனினும் நேற்று முன்தினம் மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கு இவ்வாறான அனுமதி எதுவும் பெறப்படவில்லை.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்சார விநியோகத்தைத் துண்டிக்கக்கூடாது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரபணிப்புரை விடுத்துள்ளார்.
19 minute ago
40 minute ago
46 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
40 minute ago
46 minute ago
51 minute ago