J.A. George / 2021 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்த விரைவில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டை முழுமையாக முடக்கும் போது, நாளாந்த ஊதியம் பெறுபவர்களையும் பெரும்பாலான அரசு ஊழியர்களையும் மோசமாக பாதிக்கும்.
இந்த நிலையில், இன்று காலை திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொரோனா ஒழிப்பு செயலணிக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடல் பிற்பகலில் நடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் கொரோனா காரணமாக சிலரால் அதில் கலந்து கொள்ள முடியாத நிலையொன்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சரவை கூட்டம் இணைய வழியில் இடம்பெற்றுள்ளது.
அரசாங்க வட்டார தகவலின்படி, வைரஸால் தினசரி இறப்பு எண்ணிக்கை 150 ஐ தாண்டியதால் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது பற்றி இன்றைய சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டை முழுமையாக முடக்கும் போது, நாளாந்த ஊதியம் பெறுபவர்களையும் பெரும்பாலான அரசு ஊழியர்களையும் அது மோசமாக பாதிக்கும் என்பதால் முழுமையான முடக்கமொன்றை அமுல்படுத்துவதில் அரசாங்கத்தில் இதுவரை ஒருமித்த கருத்து இல்லை என்பதை அறிய முடிந்துள்ளது.
ஏனைய சிலர், ஒரு குறுகியகால முடக்கம் கூட, மீட்க முயற்சிக்கும் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவலை வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல ஹோட்டல்கள் நீண்டகால முடக்கத்துக்கு பயந்து முன்பதிவுகளை ஏற்கெனவே ரத்து செய்யத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், கொழும்பில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலின் செய்தித் தொடர்பாளர் டெய்லிமிரரிடம், அவர்கள் எந்த முன்பதிவையும் ரத்து செய்யவில்லை என்றும், முடக்க நிலை இருந்தாலும் பயணிக்க அனுமதி இருந்தால் விருந்தினர்களுக்கு அங்கு இடமளிக்கப்படும் என்றும் கூறினார்.
(டெய்லிமிரர்)
5 minute ago
21 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
28 minute ago