2025 நவம்பர் 01, சனிக்கிழமை

‘ரஞ்சன் விவகாரத்துக்கு பதிலளிப்பதற்கு மூன்று வாரம் வேண்டும்’

Editorial   / 2021 ஜனவரி 19 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விவகாரம் தொடர்பில் பதில் வழங்குவதற்கு 3 வார கால அவகாசத்தை, சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரியுள்ளார்.

இன்று (19) கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது, ரஞ்சன் ராமநாயக்கவின் உறுப்புரிமை விவகாரம் தொடர்பில் சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதற்கு பதிலளித்து உரையாற்றும் போதே, சபநாயகர் இவ்வாறு கால அவகாசத்தை கோரினார்.

சஜித் பிரேமதாஸ

முன்னதாக, சபையில் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம், 6 மாதங்களுக்குப் பின்னரே, வரிதாக்கப்படுமென்று, தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார் என்றார்.

அவரின் கூற்றின் படி 6 மாதங்கள் வரை, ரஞ்சனின் ஆசம் அதே முறையில் தான் நடைமுறையில் இருக்குமெனத் தெரிவித்த அவர்,இது தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்றுவருவதாகவும், அதுவரையில் அவரது உறுப்புரிமை வரிதாக்கப்படமாட்டாது எனவும் கூறினார்.

அரசமைப்பின் 66, 89, 99, 105 ஆகிய உறுப்புரைகளின் பிரகாரம், ரஞ்சனின் உறுப்புரிமை பரிக்கபட்டமாடட்டாது எனத் தெரிவித்த அவர், அவ்வாறு அவரது ஆசனம் வரிதாக்கப்படுமானால், அதற்கு எதிராக சட்ட. ஜனநாயக நடவடிக்கைகளை எடுப்போமெனவும் கூறினார்.

'அரசமைப்பின் எந்தவொரு சந்தர்ப்பதிலும், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு என்ன தண்டனை வழங்குவது என்று குறிப்பிடப்படவில்லை.

'இந்நிலையில், தேர்தல்கள் ஆணையாளரின் நிலைப்பாடு இவ்வாறு இருக்கின்ற போது, ஏன் இன்று ரஞ்சனை சபைக்கு அழைக்கவில்லை' எனவும், சஜித் கேள்வியெழுப்பினார்.

சுமந்திரன்

இதையடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ரஞ்சனின் வழக்கை உயர் நீதிமன்றத்தில் வாதிடியதற்கு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

ஒரு குற்றம் குறித்தொதுக்கப்பட்ட தண்டனையாக அமைய வேண்டுமெனத் தெரிவித்த அவர், ஆனால் ரஞ்சனின் விவகாரத்தில் அந்தத் தண்டனை குறித்தொதுக்கப்படவில்லை எனவும் அதை சட்டவாக்கம் செய்வதற்கு பாராளுமன்றம்  தவறிவிட்டது எனவும் கூறினார்.

உயர்மன்றத்தால், யாருக்கும்; தண்டனை வழங்கமுடியுனெத் தெரிவித்த சுமந்திரன், ஆனால், இந்த வழக்கில் பாராளுமன்றம் சட்டமொன்றை இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினார்.

'ஆங்கில சட்டத்தில், நீதிமன்றத்தை அவமதித்த்தல் குற்றம் தொடர்பில் குறிப்பிடவில்லை. ஆனால், மன்று அதை கவனத்தில் கவனத்தில் கொள்ளவில்லை' என்றார்.

'அத்துடன், எந்தவொரு குற்றவியல் செயற்பாடுகளுக்கும் மேன்முறையீடு செய்ய முடியாது என்பதை எற்றுகொள்ள முடியாது. ஐசிசிபிஆர் சட்டம் என்ற ஒன்று இருக்கிறது. அதில் எந்தவொரு விடயத்திலும் குறைந்தது 1 மேன்முறையீடு இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசமைப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது' என்றார்.

லக்ஷ்மன் கிரியெல்ல:

இதையடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்தில் ஒருவரை அமர வைப்பது சபாநயகரின் பணி எனவும் நீதிமன்றத்துக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் இது பொறுப்பானது அல்ல எனவும் கூறினார்.

பாராளுமன்ற நடவடிக்கைகைகளில் நீதிமன்றத்தால் தலையிட முடியாதென்றார்.

'பிரமலால் ஜயசேகரை சபைக்கு அழைத்து வர முற்பட்ட போது, சட்டமா அதிபர் வேண்டாம் என்றார். ஆனால், நீங்கள் அழைத்து வந்தீர்கள். தற்போது, ரஞ்சனை அழைப்பதற்கு நீதிமன்றம், சட்டமா அதிபரின் உத்தரவு வேண்டும் என்கிறீர்கள்' என, சபாநாயகரை விழித்து சாடினார்.

உங்களுக்கு ரஞ்சனை அழைப்பதற்கான உரிமை உள்ளது எனவும், லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

மஹிந்தானந்த அளுத்கமகே

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, பிரேமலால் ஜயசேகரை அழைத்து வந்ததை பாராட்டியவர்கள், இன்று இழிவாக பேசுகிறீர்களென்றார்.

ரஞ்சனை சிறைக்கு அனுப்பியவர் சுமந்திரன் தான் எனத் தெரிவித்த அவர், வேறுஒரு சட்டத்தரணி இருந்திருந்து வாதாடி இருந்தால் ரஞ்சன் இன்று வெளியில் வந்திருப்பார் எனவும் கூறினார்.

'வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள்படபட்ட போது, சுமந்திரன் அங்கு இல்லை. அச்சமயம் ரஞ்சன் தனித்து' இருந்தார்.

'ரஞ்சன் சிறையில் உள்ளது எமக்கு கவலையாக உள்ளது. அவர் ஒட்டுமொத்த ஐக்கிய தேசிய கட்சி சார்பாகவுமே, சிறைக்கு சென்றுள்ளார்.

எனவே, ரஞ்சன் விவகாரத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதை சபாநயகர் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.

பிரேமலால் ஜயசேகர

இதையடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, எனக்கு அரசியல் பழிவாங்கலே முன்னெடுக்கப்பட்டது எனவும் இது எனது மனசாட்சிக்கு தெரியும் எனவும் என்றேனும் நீதி நிலைநாட்டப்படும் எனவும் கூறினார்.

லன்சா

இதையடுத்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் லன்சா, ரஞ்சன் நீதிமன்றத்தை அவதுராக பேசியுள்ளாரெனவும் மரங்களை கொத்தி வந்தவர், வாழை மரத்தை கொத்திய போது வசமாக மாட்டிக்கொண்டார் எனவும் கூறினார்.

எனவே, எதிர்க்கட்சியினர், சிறப்புரைமையை பயன்படுத்தி நிதிமன்றத்தை அவதுறு செய்ய வேண்டாமென்றார்.

அலி சப்ரி

இதையடுத்து உரையாற்றிய நீதி அமைச்சர் அலி சப்ரி, அரசமைப்பின் 89ஆம் பிவிரின் உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, ஜனாதிபதி அல்லது உறுப்பினர் ஒருவர் பின்வரும் தகைமையீனங்கள் அற்றவராக கருதப்படுவார் என்றார்.

'அதாவது, 6 மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பவர், உறுப்பினராக இருப்பதற்கு தகமையற்றவர் ஆவார். இதற்காக மேன்முறையீடு எதுவும் இல்லை.

'மேலும், அரசியலமைப்பின் 105இன் உப உறுப்புரை 3இல், உயர் நீதிமன்றத்துக்கு அனைத்து தத்துவங்களும் காணப்படுகின்றன. நீதிமன்றத்தை அவமதித்தால், அதற்கு தண்டிக்க முடியும். உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் எல்லையற்றது. அதை பாராளுமன்றமும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

'அத்துடன், தீர்ப்பு அளிப்பது உயர்நீதிமன்றத்தின் தீர்மானமாகும். இது அரசமைப்பில் தெளிவாகக்; குறிப்பிடப்பட்டுள்ளது.

'எனவே, இந்தத் தீர்ப்பை விமர்சிக்கும் போது, அதற்கும் ஒரு வரையறை உள்ளது. எந்தவொரு பாரதுரமான விடயம் ஏற்பட்டாலும் நீதிமன்றத்தின் கன்னியத்தை பாதுகாக்க வேண்டும்.

'சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரஞ்சனின் விவகாரம் சட்டத்துக்கு முரணானது அல்ல, அரசமைப்புக்கு உட்பட்டே இந்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

அநுரகுமார திஸாநாயக்க

இதையடுத்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, இதற்கு முன்னர் எஸ்.பி திஸாநாயக்க, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ்  2 வருடங்கள் சிறையில் அடைக்க்பட்டாரெனவும், அதற்காக அவரது உறுப்பினர் பதவி பறிக்கப்படவில்லை எனவும் கூறினார்.

மாறாக, அவர் தொடர்ந்து 3 மாதங்கள் அமர்வில் கலந்துகொள்ளவி;லலை எனத் தெரிவிக்கப்பட்டே, அவரது உரிப்புரிமை பறிக்கப்பட்டது எனவும், அநுர தெரிவித்தார்.

ஆகவே, ரஞ்சன் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் இருக்குமாயின். அவரை வரவழைப்பது சபாநாயகரின் கரங்களிலேயே உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

எஸ்.பி திஸாநாயக்க

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க, 2 வருடங்களுக்கும் மேலதிகமாக சிறையில் இருந்தால், அவருக்கு 7 வருடங்கள் வரை சிவில் உரிமை கிடையாதெனவும் அவரால் வாக்களிக்கவும் முடியாதெனவும் கூறினார்.

'யுனெஸ்கோவிக்கு மேன்முறையீடு செய்தே, அதில் வெற்றி பெற்று நான் விடுதலை பெற்றேன். ஆனால், ரஞ்சன் உடன்படிக்கை செய்துகொண்டதை ஏற்றுக்கொள்ளவலி;லை. அவரால் மேன்முறையீடு செய்யமுடியாது.

'அவருக்கு தற்போது, சிவில் உரிமையயும் இல்லாமல் போயுள்ளது. வாக்களிக்கும் உpரமையும் பறிபோய்விட்டது' என்றார்.

அநுரகுமார

இதையடுத்து, ஒழுங்கு பிரச்சினை எழுப்பி உரையாற்றி அநுரகுமார, பிரேமலால் ஜயசேகரவுககு உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் இருந்தாரெனவும் இவர்கள் குறிப்பிடும் தர்க்கத்துக்கு அமைய,  பிரேமலாலுக்கு எவ்வாறு வாக்குரிமை கிடைக்கும் எனவும் வினவினார்.

அப்படியென்றால், அவரது பிராஜாவுரிமையும் இல்லாமல் போயிருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், அப்படியிருக்கும் போது, பிரேமலால் எவ்வாறு உறுப்பினர் ஆனார் எனவும் அநுர வினவினார்.

எஸ்.பி.திஸாநாயக்க

இதற்கு பதிலளித்து உரையாற்றிய எஸ்.பி.திஸாநாயக்க, பிரேமலால் சட்ட ஆலோசகைளைப் பெற்றே மேன்முறையீடு செய்தார். அதன் பின்னரே, சபாநாயகர் முன்னிலையில் சத்தியபிரமானம் செய்துகொண்டார் என்றார்.

அலி சப்ரி

இதையடுத்து கருத்துரைத்த நீதி அமைச்சர் அலி சப்ரி

பிரேலால் வழக்கில் மேன்முறையீடு செய்ததற்கும் ரஞ்சனின் வழ்கில் மேன்முறையீடு செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது எனத் தெரிவித்தார்.

சபாநாயகர்

இதையடுத்து, பதிலளித்து உரையாற்றிய சபாநாயகர், முறையான சட்ட ஆய்வின் பின்னரே, பிரேமலால் சபைக்கு அழைத்து வரப்படார் என்றார்.

சட்ட ரீதியான பிணிணயை ஆராய்ந்த பின்னரே, அவரை அழைத்து வந்தோமெனத் தெரிவித்த சபாநாயகர், ரஞ்சன் பிரச்சினையை இப்பொழுது தான் முன்வைத்துள்ளீர்களெனவும் இதற்கு பதிலளித்து நடவடிக்கை எடுக்க எனக்கு காலஅவகாசம் வேண்டும்.

தற்போது, கொரோனா பிரச்சினை உள்ளதால், சட்டதரணிகளையும் சட்டமா அதிபரையும் சந்திப்பதில் சிக்கல் எள்ளது. எனவே, முறையான ஆலோசனை பெற்று இன்னும் 3 வாரத்துக்குள் பதில் தருகிறேன். அதுவரை 3 வார கால அவகாசம் வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X