2025 மே 14, புதன்கிழமை

ரஞ்சித் சொய்சாவின் வெற்றிடத்துக்கு வருண பிரியந்த லியனகே

Editorial   / 2019 டிசெம்பர் 13 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் வெற்றிடத்துக்கு, வருண பிரியந்த லியனகேவின் பெயர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பெயரிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், இரத்தினபுரி மாவட்டத்தில்  ரஞ்சித் சொய்சாவுக்கு அடுத்தப்படியாக அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த வருண பிரயந்த லியனகேவை, குறித்த வெற்றிடத்துக்கு பெயரிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா, உடல்நலக் குறைவு காரணமாக, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிசெம்பர் 4ஆம் திகதி காலமானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X