Editorial / 2023 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
டலஸ் அல்லது மைத்திரிபால அல்லது அநுர திசாநாயக்க அல்லது ஒருவரைத் தள்ளிவிட்டு சஜித் பிரேமதாச அணி இந்த ஜனாதிபதித் தேர்தலை தவிர்க்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் சஜித் பிரேமதாச நிச்சயமாக யால காட்டு பகுதிக்கு சென்றுவிடுவார். எனத் தெரிவித்த ரங்கே பண்டார, இப்போது யால காட்டில் நுளம்புகளை விரட்டி உண்ணிகளை அடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago