Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூலை 08 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ், ஆர்.ரமேஸ்
மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபையின் உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் ராஜாராம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் நிறைவடையும் வரையிலும் முன்னணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிஷ்ணனின் தலைமையில், கொட்டகலை அஸ்வினிக்கா விருந்தகத்தில் இன்று (08) கூடிய, ஒன்பது பேர் கொண்ட அரசியல் உயர்மட்ட குழுவிலேயே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளை கட்சி முன்னெடுத்துள்ளதாக முன்னணி அறிவித்துள்ளது.
முன்னணினால் முன்னெடுக்கப்படும் கூட்டுபொறுப்பு முயற்சியிலிருந்து விலகிச் செயற்படுவதாக அவருக்கெதிராக, தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அத்துடன், அரசியல் குழு உறுப்பினர்கள் சிலரை, தகாத வார்த்தைகளினால் ஏசியுள்ளாரென்றும் அவர்மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, இன்று கூடிய அரசியல் குழுக்கூட்டத்தின் போது, முன்னணியில் அவர் வகித்த சகல பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தியுள்ளதுடன், அவருக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் சின்னம் “மண்வெட்டி” என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago