Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் படி குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து, சற்றுமுன்னர் சோதனை நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் (24) மாலை பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.
சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
நவம்பர் 10ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வௌ்ளை வேன் தொடர்பில் போலியான விடயங்களை முன்வைத்ததாக ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, நேற்று (25) பிற்பகல் 1.15 மணியளவில் கொழும்பிலுள்ள அவரின் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.
சுமார் 20 நிமிடங்களின் பின்னர் அவர்கள் அங்கிருந்து வௌியேறிச் சென்றதுடன், அந்த சந்தர்ப்பத்தில் ராஜித சேனாரத்ன வீட்டில் இருக்கவில்லை என தகவல் வெளியானது.
அத்துடன், ராஜித சேனாரத்னவுக்கு சொந்தமான பேருவளை – ஹெட்டிமுல்ல பிரதேசத்திலுள்ள வீட்டையும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று (25) மாலை சோதனையிட்டுள்ளனர்.
இந்த சோதனையின்போது வீட்டிலிருந்த காவலாளியிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தன்னை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீள அழைக்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சார்பில், மனுவொன்று இன்று (26) தாக்கல் செய்யப்பட்டு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
32 minute ago
42 minute ago