Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Kogilavani / 2021 மே 04 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், இன்று (04) நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ளவுள்ளார்.
கொவிட்19 அவசரகால நிலைமை தொடர்பான முழுநாள் விவாதம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பாராளுமன்றில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டை சி.ஐ.டியினர் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அதிகாலையில் பயங்கரவாதத் தடைச் சடடத்தின் கீழ் கைது செய்திருந்ததோடு, அவரை 90 நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்களுக்கு அமைய, சபை அமர்வுகளில் ரிஷாட் கலந்துகொள்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், இன்று நடைபெறும் சபை அமர்வில் ரிஷாட் கலந்துக்கொள்ள உள்ளார்.
இதற்காக இன்று காலை 9.30 மணியளவில் ரிஷாட் பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் அழைத்து வரப்பட உள்ளார்.
இதேவேளை மரணதண்டனைக் கைதியான பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவும் இன்றைய அமர்வில் கலந்துகொள்வதற்காக புதிய மகசின் சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
44 minute ago
47 minute ago
50 minute ago