2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ரொஷானுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு

Editorial   / 2023 நவம்பர் 29 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில், நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரரான வழக்கறிஞர் டிமிட்ரி ஷிராஸ் அகஸ்டஸ் பீட்ராஞ்செலி,      வழக்கறிஞர் சுபாஷினி ஜே மூலம் விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.

 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதிய பாராளுமன்ற அமர்வின் போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் நீதிமன்ற அவமதிப்புக்குரிய நடத்தையை சவால் செய்தார்.

அரசியலமைப்பின் 105(3) பிரிவின் கீழ் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக முன்னாள் அமைச்சருக்கு தண்டனை விதிக்க உத்தரவிடுமாறு மனுதாரர் மேலும் கோரியுள்ளார்.

நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவினால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக்கான காரணங்கள் தொடர்பில் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கநவம்பர் 8ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக தனது மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .