Editorial / 2020 செப்டெம்பர் 28 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
ஒன்றினைந்த தமிழ்க்கட்சிகள் வடக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விட்டிருந்த நிலையில், இன்றைய தினம் (28) யாழ்ப்பாணத்தில் கடைகள் வர்த்தக நிலையங்கள் கதவடைப்புக்கு ஆதரவு வழங்கிருந்தது.
திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்ற தடை உத்தரவு விதிக்கப்பட்டதைத்தொடரந்து வடக்கில் உள்ள தமிழ்கட்சிகள் ஒன்றினைந்து தடைஉத்தரவை மீள் பரிசீலனை செய்ய கோரியதுடன் நினைவேந்தல் எமது உரிமை அதற்கான நெருக்கடியை தளர்த்துமாறு ஜனாதிபதிக்கும் கடிதம் மூலம் கேரிரக்கை விடுத்திருந்தனர்.
இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் சாதகமான பதில் ஏதும் கிடைக்காத நிலையில், உரிமைகள் மறக்கப்பட்டு அடக்குமுறைகள் இடம்பெறுவதை ஏற்கமுடியாது என்று தெரிவித்த ஒன்றினைந்த தமிழ் கட்சிகள் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற அடையாள உண்ணாவிரதத்துக்கும் இன்று 28ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மற்றும்' பொதுச் சந்தைகள் அனைத்தும் இயக்கம் இன்றி வெறிசந்சோடிக் காணப்பட்டது.
ஆனால் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறை இரண்டும் வழமையான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டன. இதுமட்டுமல்லாது பாடசாலைகளில் கனிசமான மாணவர்கள் வரவுகளும் பதிவாகியிருந்தன.
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago