J.A. George / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எமது சகோதர பத்திரிகைகளில் ஒன்றான ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையின் நாடாளுமன்ற செய்தியாளர் ஒருவர், தனது வீட்டிலிருக்கும் போது மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது.
அதையடுத்து, விஜய நியூஸ் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவம், தனது அலுவலக வளாகத்தை மூடி, கிருமித்தொற்று நீக்கம் செய்து, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்ட ஊழியர், சுய விருப்பின் அடிப்படையில், பிசிஆர் பரிசோதனைக்குத் தம்மை உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘சண்டே டைம்ஸ்’ ஊழியர்களில் பெரும்பாலானோர், கடந்த மாதம் முதல் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர். மட்டுப்படுத்தப்பட்ட நாள்களில் மட்டும், அலுவலகத்துக்கு வந்து பணியாற்றும் ஊழியர்கள், சுகாதார வழிகாட்டல்களைக் முழுமையாகப் பிற்பற்றுகின்றனர். முகக்கவசங்களை அணிதல், கைகளைக் கழுவுதல், சானிட்டைசரை அடிக்கடி, தவறாமல் பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதுடன், ஆகக் கூடுதலான சமூக இடைவெளியையும் பேணுகின்றனர்.
எங்களுடைய அச்சகமும் விநியோக மையமும், ஹோகந்தரவில் அமைந்துள்ளது. இந்த அச்சகம், கொழும்பு 02, ஹுணுபிட்டிய வீதியிலுள்ள ஆசிரியபீட அலுவலகத்திலிருந்து குறிப்பிடத்தக்களவு தொலைவில் அமைந்திருப்பதுடன், செய்மதித் தொழில்நுட்பத்தினூடாக, இரு அலுவலகங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
எமது அச்சிடும் பணிகளும் விநியோக வலையமைப்பின் செயற்பாடுகளும் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற பத்திரிகைகளில் பின்பற்றப்படும் சர்வதேச பாதுகாப்பு நியதிகளின் பிரகாரம் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை, எமது வாசகர்களுக்கு நாம் உறுதியளிக்கின்றோம்.
இந்தத் தொற்றுப் பரவல் தொடர்பிலான விவரங்கள், அரசியல், வாணிபம், விளையாட்டு போன்றவற்றின் பிந்திய செய்திகளுடன் கட்டுரைகளையும் தொடர்ந்தும் எமது பத்திரிகைகளினூடாக வழங்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்.
5 minute ago
9 minute ago
19 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
19 minute ago
25 minute ago