Editorial / 2020 நவம்பர் 22 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று(21) 487 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,771 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 13,590 பேர் குணமடைந்துள்ளதுடன், 6,107 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
வௌ்ளவத்தையில் ஒருவர் மரணம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று (21) மட்டும் ஒன்பது பேர் மரணித்தனர். அதிலொருவர் வெள்ளவத்தையைச் சேர்ந்தவர் ஆவார்.
வௌ்ளவத்தையைச் சேர்ந்த 76 வயதான ஆணொருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து, கொவிட்-19 தொற்றாளர் என இனங்காணப்பட்ட அவர், முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு மரணமடைந்துவிட்டார்.
கொவிட்-19 நிமோனியாவுடன் பக்றீரியாவும் தொற்றிக்கொண்டது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் மரணமடைந்துள்ளார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .