Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 29 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1.1 பில்லியன் ஐ.அ டொலர்கள் பெறுமதியான ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில், அரசாங்கம் இன்று (29) கைச்சாத்திட்டது. துறைமுக அமைச்சில் வைத்தே, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இது தொடர்பாக, ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட தடுமாற்றம் காரணமாக, அரசாங்கம் 46 பில்லியன் ரூபாயை இழந்துள்ளதாக கூறியுள்ளார்.
“இந்தத் தொகையை நாம் இழந்திருக்காவிடின், நாட்டிலுள்ள 2.5 மில்லியன் மக்களுக்கு, இலவசமாக மருந்துகளையும் சிகிச்சைகளையும் அளித்திருக்க முடியும்” என்று அவர் கூறினார்.
“ஹம்பாந்தோட்டை துறைமுகத்திட்டம் தொடர்பாக, வௌ்ளிக்கிழமை (28) அன்று விவாதிப்பதற்கு, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும், அது தொடர்பாக விவாதிக்க, அவர்கள் முன்வரவில்லை. காரணம், விவாதிப்பதற்கு சரியான காரணம் அவர்களிடம் இல்லை” என்றும் இதன்போது அவர் கூறினார்.
ஹம்பாந்தோட்டை துறை முகத்திட்டத்துக்கான பாதுகாப்பு பணிகள் அனைத்தும், சிவில் மற்றும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், நிலப்பரப்பு தொடர்பான விடயங்களை, அரசாங்கமே கையாளும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, மாத்தளை விமான நிலையம் தொடர்பான ஒப்பந்தம், இந்த வருட இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.
“எவ்வாறாயினும், சூரியவெவ கிரிக்கெட் மைதானம் தொடர்பாக மோசமான செய்திகளையே நாம் அறிந்துள்ளோம். மைதானத்துக்கான எந்தவொரு தேர்வாளர்களும் இல்லை. இந்தத் திட்டத்துக்காக, எம்முடை வரியிலிருந்து, நாம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையே உள்ளது” என்று அவர் கூறினார்.
மேலும் கூறிய அவர், “நாட்டின் பொருளாதாரம் ஒரு சதுப்பு நிலமாகவே காணப்பட்டது. எனினும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த 2 வருடங்களாக, ஒவ்வொன்றாக சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. பொருளாதாரம் ஒரு நிலைக்கு வந்துள்ளது” என்று அவர் கூறினார்.
15 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
4 hours ago