2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'அஞ்சலி'யை தேடிச் சென்றார் பிரதமர்

George   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒக்லன்டிலுள்ள அஞ்சலி என்ற யானைக் குட்டியை தேடிச் சென்று பார்வையிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம், நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, இலங்கைக்கு வந்திருந்தபோது, அஞ்சலி என்ற யானைக் குட்டியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்பளிப்பாக வழங்கினார்.

குறித்த யானைக் குட்டி, ஒக்லன்ட் விலங்குகள் பூங்காவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

பின்னவலயில் பிறந்த அஞ்சலிக்கு இப்போது 9 வயதாகின்றது. இப்போது அது பூரண நலத்துடன் மகிழ்ச்சியாக உள்ளதாக பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X