2025 ஜூலை 31, வியாழக்கிழமை

அமெரிக்காவின் ஹொப்பர் கப்பல்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 25 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அமெரிக்காவுக்கும்; இலங்கைக்கும் இடையிலான இரு தரப்புக் கூட்டுறவை வளர்க்கும் முகமாகவும் பலப்படுத்தும் முகமாகவும் ஐக்கிய அமெரிக்க ஹொப்பர் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை நேற்று (24)  வந்தடைந்துள்ளது.  

இவ்விரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவு' கடற்படையினர் இந்து பசுபிக் சமுத்திரப் பிராந்தியத்தில் கடலோரப் பாதுகாப்பை  அதிகரிக்கின்றனர் என்றும் எமது ஐக்கிய அமெரிக்கக் கடற்படை மாலுமிகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு இலங்கை சிநேகபூர்வமாக மற்றும் உடனடி உதவிகளை வழங்கியமை கூட்டுறவுச் செயற்பாட்டின் இன்னுமோர் உதாரணமாக அமைகின்றது என இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் அத்துள் கேஷாப் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின்போது, ஐக்கிய அமெரிக்க மாலுமிகள் தமது இலங்கைச் சமதரப்பினருடன் விளையாட்டுகளில்; மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களில் பங்குகொண்டார்கள் என்பதுடன், கடலில் மீட்பு மற்றும் கப்பல் ஆய்வுக்கான தந்திரோபாயப் பயிற்சியையும் பகிர்ந்து கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .