Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜூலை 06 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
வற் அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நீர்கொழும்பு நகர மத்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டு, தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த அமரசிங்க ஊடகங்களுக்கு பின்வருமாறு தெரிவித்தார்.
“ரணில் விக்கரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தற்போதைய கூட்டு அரசாங்கம் பழைய அரசாங்கம் சென்ற பாதையிலேயே பயணித்து மக்கள் மீது வரிகளை சுமத்துகிறது. அண்மையில் அதிகரிக்கப்பட்ட வற் வரி மக்கள் மீது தாங்க முடியாத சுமையாக அiமைந்துள்ளது.
சிறுநீர் பரிசோதனை, இரத்த பரிசோதனை உட்பட சகல சுகாதார சேவைகளுக்கும் பொதுமக்கள் தாங்கமுடியாத வகையில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. சகல வர்த்தகர்களினதும் மாத வருமானம் 33 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமாயின் அவர்கள் வரி செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக மக்கள் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மக்கள் நாடெங்கும் அதிகரித்த வற் வரிக்கு எதிராக தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி கடந்த நான்காம் திகதி முதல் ஒரு வார காலம் நாடு முழுதும் அதிகரிக்கப்பட்ட வரிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
21 minute ago
27 minute ago