Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
கண்டி, வைத்தலாவ தோட்டக் காணியை, தலா இரண்டு ஏக்கர் வீதம் தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தோட்ட நிர்வாகமானது, பொலிஸாருடன் இணைந்து, தொழிலாளர்களுக்கு எதிராக செயற்படுகின்றது. இது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும். தொழிலாளர்களின் வேண்டுகோளின்படி, இந்தக் காணிகளை, தலா இரண்டு ஏக்கர்; வீதம் தொழிலாளர்களுக்கு பிரித்துக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
கண்டி மாவட்டம், உடுதும்பர பகுதியிலுள்ள வைத்தலாவ தோட்ட மக்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று வியாழக்கிழமை (1) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது.
'வைத்தலாவ தோட்டமானது, அரச பெருந்தோட்ட யாக்கத்துக்கு சொந்தமான தோட்டமாகும். இத்தோட்டம், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கையளிக்கப்பட்டது. அந்த தனியார் நிறுவனமானது, தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை முறையாக செலுத்தவில்லை.
அத்துடன், கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. தவிர, கடந்த ஐந்து மாதங்களாக, தோட்டத்தை பலவந்தமாக மூடியும் வைத்துள்ளனர்.
இதனால், தொழிலாளர்கள் வருமான ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் தாம் பராமரித்து வந்த தேயிலை தோட்டங்களிலிருந்து கொழுந்துகளை பறித்து, வருமானத்தை பெற முயற்சிக்கின்றனர்.
ஆனால், தோட்ட கம்பனியானது பொலிஸாரின் உதவியுடன் இதற்கு இடையூறு விளைவித்து வருகின்றது. எனவே, உடனடியாக அரசாங்கம் இந்த தோட்டத்தை பொறுப்பேற்க வேண்டுமென்பதுடன் காணிகளை 2 ஏக்கர் வீதம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். அதைவிடுத்து வேறு தேவைகளுக்காக இந்த தோட்டத்தை வழங்க முற்பட்டால் போராட்டம் வலுவடையும்' என்றார்.
21 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
53 minute ago