2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

போராட்டம் கைவிடப்பட்டது

Kogilavani   / 2016 ஜூலை 24 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

மொரகஹகந்த, களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 50 சதவீத நட்டஈட்டை வழங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இணக்கம் தெரிவித்ததை அடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், தங்களது போராட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை கைவிட்டனர்.  

கடந்த புதன்கிழமை (20) ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் நான்காவது நாளாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்ததை அடுத்து, மூவரின் உடல்நிலை மோசமானதால், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், போராட்டம் இடம்பெற்றுவரும் இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், நட்டஈட்டை வழங்க அரசாங்கம் இணங்கியுள்ளதால், போராட்டத்தைக் கைவிடுமாறு கோரினர். இந்நிலையிலேயே, போராட்டம் கைவிடப்பட்டது.  இப்போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், லக்கல நகரில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .