Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மண்முனைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள மதுபானசாலைகளை மூடுமாறு கோரி அப்பிரதேச செயலகத்துக்கு முன்பாகப் பிரதேசவாசிகள் இன்று (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையத்தின்; ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில்,'மண்முனைப்பற்றில்; ஏழு மதுபானசாலைகள் உள்ளன. இங்கேயே கூடியளவான மதுபானசாலைகளும்; உள்ளன. குடியிருப்புப்பகுதி, கோவில்கள், பாடசாலைகளுக்கு அருகில் பல மதுபானசாலைகள் காணப்படுவதால், தினமும் அசௌகரியத்தை எதிர்நோக்குகின்றோம்.
மண்முனைப்பற்று -ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள மதுபானசாலையால் தினமும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அம்மதுபானசாலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியபோதும், இதுவரையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இங்குள்ள மதுபானசாலைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை உரிய அதிகாரிகள் எடுக்காது போனால், தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம்' என்றனர்.
ஆர்ப்பாட்ட இறுதியில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரை மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயத்திடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவிக்கையில், 'மதுபான சாலைகளை மூடுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் மக்கள் போராட்டம் வெடிக்கும். அதன் முதல் கட்டமாகவே மண்முனைப்பற்று பிரதேச மக்கள் அணி திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
மதுவற்ற தேசத்தை உருவாக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதியவர்கள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இது விடயத்தில் அக்கறை எடுத்து இந்த மதுபான சாலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபையிலிருக்கின்ற எமது மாகாண சபை உறுப்பினர்கள் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளோம்.
மதுபான சாலைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூடுவதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்க விருக்கின்றோம்.
வெளிமாவட்டங்களில் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொண்டு இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான சாலைகளை திறப்பதை கட்டுப்படுத்துவதற்கும் அதை தடுத்து நிறுத்துவதற்குமான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு எமது கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்;' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago
24 May 2025