2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

1000 ரூபாய் கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

1000 ரூபாய் சம்பள உயர்வைக் கோரி, பொகவந்தலாவைக்கு உட்பட்ட தோட்ட மக்கள் பொகவந்தலாவை பிரான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவ்வீதி வழியான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டது.

இந்நிலையில், பொகவந்தலாவை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரழைக்கப்பட்டு நிலைமையை சீர்செய்தனர்.நோர்வூட், வெஞ்சர் மற்றும் சென்ஜோன்டிலடி, டிக்கோயா, வனராஜா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பளவுயர் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இனங்கவேண்டும் என ஆர்பாட்டகாரர்கள் இதன்போது கோரினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X