Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 24 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
200 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மலையகத் தமிழ் சமூகத்திற்கு உயர்ந்த வாழ்க்கைத் தரம் இப்போதாவது கிடைக்க வேண்டும்.
மலையக மக்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காமை குறித்து கொள்கை வகுப்பாளர் என்ற ரீதியில் நாமும் வெட்கப்படுகிறோம்.
மலையக சமூகம் மலையகத்திலும் அதற்கு வெளிப்பகுதியிலும் இரண்டிலுமே வாழ்ந்து வருகின்றனர். மிகக் குறைந்த வருமானத்தை ஈட்டி, தேயிலைத் தொழில் மற்றும் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தாலும் இந்த தியாகங்களுக்கு ஏற்ற உயர் வாழ்க்கைத் தரத்தை அவர்கள் இன்னும் அடையவில்லை.
கொள்கை வகுப்பாளர் களாகிய நாம் இதற்காக வெட்கப்படுகிறோம். மலையக தமிழ் மக்களை எண்ணி கவலையடைந்தால் மாத்திரம் போதாது. அவர்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டியது அவசியமாகும். இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படாமை குறித்து கொள்கை வகுப்பாளர்கள் என்ற ரீதியில் வெட்கப்படுகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை குறித்து, மலையக தமிழ் இளைஞர் யுவதிகளின் புகைப்படக் கதைகளைக் கொண்டமைந்த "200+ Beyond the Struggle " புகைப்பட கண்காட்சி கொழும்பு 07 இல் அமைந்துள்ள லயனல் வென்ட் அரங்கில் இடம்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (23) அன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் சுரங்க ரணசிங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
மலையக தமிழ் இளைஞர், யுவதிகள் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இந்த தனித்துவமான கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கின்றனர். எமது நாட்டில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் மிக முக்கியத்துவமான விடயங்களை அவர்கள் இந்த புகைப்படங்கள் ஊடாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
அவை மிகவும் கவலையளிப்பவையாகவுள்ளன. கவலையடைவது மாத்திரம் போதுமானதல்ல. மலைய மக்களின் பிரச்சினைகளுக்கு ஸ்திரமான தீர்வொன்றை வழங்க வேண்டியது எமது கடமையும், பொறுப்புமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அவ்வாறே, மலையக மக்கள் குறிப்பாக தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர். ஆனால் அவர்களது உழைப்பிற்கு சமமான வாழ்வாதாரமோ வாழ்க்கைத் தர உயர்வோ அவர்களுக்கு கிடைக்கப் பெறவில்லை.
கொள்கை வகுப்பாளர்கள் என்ற ரீதியில் அவை தொடர்பில் நாம் வெட்கப்பட வேண்டும். அதற்காக நாம் எமது கவலையை வெளிப்படுத்துகிறோம் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.
200 ஆண்டுகள் என்ற நீண்ட வரலாற்றுக்குள் எமது நாட்டுக்கு பாரியளவில் அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுத்த மலையக சமூகத்திற்கு, நாம் ஆற்றியுள்ள வரையறுக்கப்பட்ட சேவை தொடர்பில் எந்த வகையில் எம்மால் மகிழ்ச்சியடைவோ, திருப்தியடையவோ முடியாது. நானும் தனிப்பட்ட ரீதியில் அதற்கு பொறுப்பு கூற வேண்டியுள்ளது. எவ்வாறிருப்பினும் இவ்வாறு புகைப்படக் கண்காட்சிகள் ஊடாக பாடங்களைக் கற்றுக் கொண்டு களத்தில் நடைமுறை சாத்தியமான மலையக மக்களுக்கு உயர் வாழ்க்கை தரத்தை வழங்கக் கூடிய புதிய கொள்கைக்கான வேலைத்திட்டத்தின் அவசியத்தை நாம் இந்த சந்தர்ப்பத்தில் ஏற்றுக் கொள்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேயிலை தொழிற்துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்ற மலைய மக்களின் வாழ்க்கையும், அவர்கள் எதிர்கொள்ளும் துயரமும் இந்த கண்காட்சியில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தேயிலை ஏற்றுமதியூடாக பல மில்லியன், பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு வருமானம் கிடைக்கப் பெற்றாலும், அதற்கு வழிவகுக்கும் மக்களின் வாழ்க்கை தரம் கீழ் மட்டத்திலேயே காணப்படுகிறது. எனவே அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago