2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

5000 ரூபாய் ...

Freelancer   / 2021 ஜூன் 03 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்திலும் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப கட்ட நிகழ்வாக முல்லைத்தீவு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள்,  சமூர்த்தி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி கணேசமூர்த்தி ஜெயபவானி, முல்லைத்தீவு தெற்கு கிராம அலுவலர் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் மக்களின் வீடுகளுக்கு சென்று  கொடுப்பனவுகளை வழங்கி   ஆரம்பித்து வைத்திருந்தனர். 

அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 34,146 குடும்பங்களுக்கு இந்த 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

(படங்களும் தகவலும் சண்முகம் தவசீலன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X