2025 மே 15, வியாழக்கிழமை

75ஆவது சுதந்திர தினம்…

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (15) காலை நடைபெற்றது.

முன்னதாக, யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு  ஆகியோர், பலாலியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் நடந்த தேசியக் கொடியேற்றல் நிகழ்வில் துணைத்தூதுவர், இந்தியத் தேசியக் கொடியை ஏற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .