Janu / 2023 ஜூலை 10 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பரிசீலனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை (10) காலை 6.30 மணியளவில் மன்னார் பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் மன்னார் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.பி.ஜெயதிலக்க தலைமையில் இடம்பெற்றது.

அதன் போது மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ.எஸ். சந்திரபால பரிசீலனைகளை மேற்கொண்டதோடு, பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதன் போது பொலிஸ் அத்தியட்சகர் (1) எச்.எம்.சி.பி ஹேரத், உதவி பொலிஸ் அத்தியட்சகர் 2 விதானகே ,மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ,மன்னார் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது.

இதனை தொடர்ந்து மன்னார் நகரின் ஊடாக பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் சிறப்பான முறையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.







9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025