Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2017 ஜூலை 15 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் 2017ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொருட்களை கையளித்தார்.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட இப்பொருட்கள், காத்தான்குடி பிரதேசத்திலுள்ள கழகங்கள், சங்கங்கள், பாலர் பாடசாலைகள் மற்றும் மதரசாக்கள் என 15 பொது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .