Editorial / 2022 டிசெம்பர் 14 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அன்ரன் பாலசிங்கத்தின்…
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு உடையார் கட்டுப்பகுதியில் சிறப்புற இன்று (14) நடைபெற்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் பல்வேறு சமாதான பேச்சுக்களிலும் கலந்து கொண்ட தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உயிரிழந்த 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு உடையார் கட்டுப்பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள். (சண்முகம் தவசீலன்)




1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025