Editorial / 2019 ஜனவரி 18 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}




டி.ஷங்கீதன்
விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமக்கப்பட்டுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், இலக்கம் 356 பீ, காலி வீதி, கொழும்பு 3இல் அமைந்துள்ள புதிய அலுவலகத்தில், இன்று (17) காலை 9 மணிக்கு கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாரம், அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .