2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் தைத்திருநாள்…

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

உழவர் திருநாளாம் தைத்திருநாளை உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இன்று (15) காலை முதல் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் மழைக்கு மத்தியிலும் மக்கள் மகிழ்வோடு தை மகளை வரவேற்று மகிழ்ந்தனர்.

இதேவேளை கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க அக்கரைப்பற்று கேளாவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் பொங்கல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன் மக்கள் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

விசேடமாக 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆலயத்தின் கும்பாபிசேக இறுவட்டு வெளியீடும் ஆலயத்தலைவர் வே.அருள்ராஜா தலைமையில் சிவஸ்ரீ கணேசன் குருக்கள் மற்றும் பிரம்மஸ்ரீ தவேந்திர சர்மா குருக்கள் முன்னிலையில் இடம்பெற்றமை சிறப்பம்சமாக அமைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X