2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அரசி வன்னி நாச்சியாருக்கு சிலை

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,ஆர்.ஜெயஸ்ரீராம்

பனிச்சங்கேணி அரசி வன்னி நாச்சியாரின் திருவுருவச்சிலை, பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய வளாகத்தில்; சனிக்கிழமை (17) திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு, வாகரைப் பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, 'பனிச்சங்கேணி அரசி வன்னி நாச்சியாரின் ஒரு வரலாற்றுப் பார்வை' எனும் நூலை வாகரை வாணன் வெளியிட்டு வைத்ததுடன், இவரது சேவையைப் பாராட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.

கி.பி. 16ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அரசி வன்னி நாச்சியார் வாகரை, பனிச்சங்கேணிப் பகுதியில் வாழ்ந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X