2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஆர்ப்பாட்டம் காரணமாக பொகவந்தலாவ நகர் ஸ்தம்பித்தது

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் 25 நாள்கள்  வேலை, கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் பொகவந்தலாவ பிரதேச மக்கள், ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து, இன்று (26) காலை ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பொகவந்தலாவ, கொட்டியாகலை, பொகவான குயினா, ஜெப்பல்டன், பி.எஸ்.ஜெப்பல்டன், டி.பி.செல்வகந்தை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 2,000கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவுத் தெரிவிக்கும் வகையில், பொகவந்தலாவ நகர வர்த்தகர்களும் கடையடைப்புப் போராட்டத்தை மேற்கொண்டதுடன் வாகனசாரதிகளும் ஆதரவு வழங்கினர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதான வீதியில் கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதால், பொகவந்தலாவ வீதியின் போக்குவரத்தும் மூன்று மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X