2025 மே 15, வியாழக்கிழமை

இ.தொ.காவின் 82ஆவது ஆண்டுவிழா இன்று

Editorial   / 2021 ஜூலை 25 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 82ஆவது ஆண்டு விழா, கொழும்பு, பழைய பாராளுமன்ற வளாகத்திலுள்ள ஸ்தாப தலைவர் அமரர்,​ சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தலுடன் இன்று (25)நடைபெற்றது.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் அரசியல், தொழிற்சங்க, பொருளாதார மற்றும் ஏனைய உரிமைகளை பாதுகாக்கும் நோக்கோடு 1939ஆம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸாக உருவாக்கப்பட்டது.

அதன்பின்னர், 1954ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக பரிணமித்து இன்று (25) தனது 82ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதில் காங்கிரஸ் பெருமிதம் கொள்கிறது.

ஸ்தாப தலைவரின் உருவச்சிலைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,  உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் மலர்மாலைகளை அணிவித்தனர்.

காங்கிரஸின் முக்கியஸ்தர்களும், அண்ணாரின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர். (படங்களும் தகவல்களும். இ.​தொ.கா ஊடகப்பிரிவு)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .