2025 மே 21, புதன்கிழமை

​இந்திய அரசாங்கம் நிதி உதவி

Kogilavani   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் டி.வி.டி.சி தொழிற்பயிற்சி நிலையத்தின் அடிப்படைத்  தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில்,
இந்திய அரசாங்கம்  199 மில்லியன் ரூபாய் நிதியை  வழங்கியுள்ளது.

 

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், இந்திய அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய,  இந்நிதி உதவி கிடைக்கப்பெற்றுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், இன்று (20) கைச்சாத்திடப்பட்டது.

குறித்த உடன்படிக்கையில்,  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தர்ஜித் சிங் சந்து மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சனி நடராஜபிள்ளை ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வில், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த நிதியானது, டி.வி.டி.சி தொழிற்பயிற்சி நிலையத்தின் மனிதவள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறை, தொழில்நுட்பகூடம், மாநாட்டு மண்டபம், கட்டட புனரமைப்பு, சுற்று மதில் சுவர் அமைப்பு, இயந்திரங்கள் கொள்வனவு, வாகன, கட்டட பொருட்கள், தளபாடங்கள் மற்றும் கணினி தொழிநுட்பம் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .