Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி கதிரவ மறைப்பு (சூரிய கிரகணம்) இன்று 14ஆம் திகதி திங்களன்று நிகழவுள்ளது.
பூமி மற்றும் சூரியனுக்கு இடையே நிலவு கடந்து செல்லும்போது சூரியன் மறைக்கப்படுவது சூரிய கிரகணம் எனப்படும். இந்த நேரத்தில் நிலவின் நிழல் பூமியின் மேற்பரப்பின் மீது விழும்.
சூரியனின் ஒளி நிலவின் மீது விழுவதால்தான் இந்த நிழல் பூமி மீது விழுகிறது என்பதால், பகல் நேரத்தில் மட்டுமே கதிர்வ மறைப்பைக் காண முடியும்.
ஆனால், கதிர்வ மறைப்பு நிகழும்போது பூமியில் எங்கெல்லாம் பகல் நேரம் உள்ளதோ அங்கெல்லாம் காண முடியாது.
நிலவு உருவத்தில் சிறியது என்பதால், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே கடந்து செல்லும்போது, அதன் நிழல் பூமியில் எந்தெந்தப் பகுதிகளில் தென்படுமோ, அந்தப் பகுதிகளில் இருந்து மட்டுமே கதிரவ மறைப்பைக் காண முடியும்.
இந்திய நேரப்படி இந்த நிகழ்வு இன்று 14ஆம் திகதி திங்கள்கிழமை மாலை 7:03 மணிக்கு தொடங்கி நாளை 15ஆம் திகதி அதிகாலை 12:23 மணி வரை நீடிக்கும்.
இந்த சூரிய கிரகணத்தின் உச்சம் இன்று 14ஆம் திகதி திங்கள்கிழமை இரவு 9:43 மணிக்கு நிகழும்.
தென் அமெரிக்க கண்டத்தின் தெற்கு பகுதிகள், ஆபிரிக்க கண்டத்தின் தென்மேற்கு பகுதிகள், அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் இருந்து இன்று சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
தென் அமெரிக்காவின் தெற்கு பகுதியிலுள்ள சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய பகுதிகளில், கதிரவ மறைப்பின் உச்சம் நிகழும் இரண்டு நிமிடம், பத்து நொடிகளுக்கு முழு கதிரவ மறைப்பு (Total Solar Eclipse) நிகழும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
அதாவது இந்த நேரம் பகலிலேயே இருள் போல காட்சியளிக்கும். ஏனென்றால் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே கடந்துசெல்லும் நிலவு பூமியிலிருந்து சூரியன் தெரியாதபடி முழுமையாக அதை மறைத்துக்கொள்ளும்.
3 hours ago
17 Jul 2025
17 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
17 Jul 2025
17 Jul 2025