Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 27 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய பக்கவாத தின நடைப்பயணம், ‘இருளடைந்த வாழ்வுக்கு ஒளி’ எனும் தொனிப்பொருளில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், விகாரமகாதேவி பூங்காவில் நேற்று (26) நடைபெற்றது.
பக்கவாத நோய் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டி பக்கவாத நோயைத் தவிர்க்கும் நோக்குடன் இலங்கை தேசிய பக்கவாத சங்கத்தினால் இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மூளைக்கான குருதி வழங்கலில் சடுதியாக எற்படும் தடை காரணமாக பக்கவாதம் ஏற்படுகிறது. உலகில் உயிரிழப்பு ஏற்படுத்தும் நோய்களில் பக்கவாதம் இரண்டாவது இடத்திலுள்ளது. அத்துடன் முதியோர்களை அங்கவீனராக்கும் பிரதான காரணியாகவும் பக்கவாதம் உள்ளது. நடைப்பயணத்தில் இலங்கை தேசிய பக்கவாத சங்கத்தின் போஷகர் மருத்துவ கலாநிதி ஜே.பீ.பீரிஸ், நரம்பியல் நிபுணர் மருத்துவ கலாநிதி பத்மா குணரத்ன உள்ளிட்ட சுகாதார துறை அலுவலர்களும் கலைஞர்களும் பங்குபற்றினார்கள்.
பக்கவாத நோய் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டுவதற்கு இலங்கை தேசிய பக்கவாத சங்கம் மேற்கொள்ளும் சேவையை, ஜனாதிபதி பாராட்டினார். இதேவேளை, சுகாதார துறைக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றும் சேவையை இலங்கை தேசிய பக்கவாத சங்கத்தின் தலைவர் எம்.டி.எம்.ரிப்ஷி பாராட்டினார்.
(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
3 minute ago
40 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
40 minute ago
1 hours ago
3 hours ago