2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இரத்ததான முகாம்…

Editorial   / 2023 மே 07 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெசாக் தினத்தை முன்னிட்டு மருதமுனை மனாரியன்ஸ் பல்கொன்ஸ்  சமூக அமைப்பு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலை இரத்த வங்கியோடு இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான  முகாம் மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.

மன்னாரியன்ஸ் பல்கொன்ஸ் சமூக அமைப்பின் தலைவர் எம்.எப். வஹாபுல் பஹத் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.டி.சி.எஸ். ரத்னநாயக்க தலைமையிலான விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இரத்தத்தை தானமாக வழங்கினார்கள்.

வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் பி.டி.எஸ். நிர்மலி உட்பட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டு இரத்த மாதிரிகளை சேகரித்துக் கொண்டனர்.

பாடசாலையின் அதிபர் ஐ.எல். உபைதுல்லா, மஸ்ஜிதுல் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எம்.ஐ.எம். முஹர்ரப், ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் அமைப்பின் தலைவர் கலீல் கபூர், அமைப்பின் செயலாளர் கே என். அகாஷ் அஹமட் உட்பட மனாரியன்ஸ் பல்கொன்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டனர். பெண்களுக்கான பிரத்தியேக இடம் ஒதுக்கப்பட்டு இரத்த தான முகாம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ.எல்.எம்.ஷினாஸ்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .