2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இறுதி மரியாதை…

Editorial   / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த வேளையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நிரோஷன் இந்திக்க பிரசன்னவின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி மரியாதை செலுத்தினார்.

பூதவுடல் வைக்கப்பட்டுள்ள காலி, உடுகம பிரதேசத்திலுள்ள அவரது வீட்டுக்கு, நேற்று (02) காலை சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி உட்பட குடும்ப உறவினர்களுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

(பட உதவி: ஜனாதிபதி ஊடகப்பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X