2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை மற்றும் சிங்கப்பூரின் கூட்டு முத்திரை வெளியீடு

Ilango Bharathy   / 2021 ஜூலை 28 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 50 ஆண்டுகால இராஜதந்திர உறவினை நினைவுகூரும் வகையில் இலங்கை-சிங்கப்பூரின் கூட்டு முத்திரை வெளியீட்டு விழா நேற்று (27) திகதி இலங்கை வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது.


இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இணையவழி ரீதியாக இணைந்து கொண்ட சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரின் பங்களிப்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.


இதன் போது சம்பிரதாயபூர்வமாக இரண்டு முத்திரைகள் வெளியிடப்பட்டதுடன், அவை கடல் சூழலைப் பாதுகாப்பதில் இரு நாடுகளினதும் பகிரப்பட்ட ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் குறிப்பாக 'கடல் பாதுகாப்பு' என்ற கருப்பொருளை சித்தரிக்கும் விதமாகவும், இலங்கையின் சதுப்புநிலங்கள் மற்றும் சிங்கப்பூரின் பவள சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதை வெளிப்படுத்தும் முகமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .