2025 மே 19, திங்கட்கிழமை

உருவச்சிலை திறந்து வைப்பு…

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர். அமரர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின், திருவுருவச் சிலை, மட்டக்களப்பில் இன்று (15) திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பஸ் நிலையச் சந்தியில், வாவிக்கரை வீதி- 01ல், இத் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு, திறந்துவைக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும்,  எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா,  எம்.எஸ்.எம்.நூர்தீன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X