Freelancer / 2022 மே 24 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெகுசன ஊடக அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன் நேற்று (23) பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கலாநிதி பந்துல குணவர்தன, அதற்கு சிறிது நேரத்தின் பின்னர் பொல்ஹேன்கொட வெகுசன ஊடக அமைச்சுக்கு சென்று, தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னரும் வெகுசன ஊடக அமைச்சராக பதவி வகித்த பந்துல குணவர்தன, வெகுசன ஊடக அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட மற்றும் மேலதிக செயலாளர்களான ருவன் சத்குமார, ஈ.எம்.எஸ்.பி. ஜயசுந்தர உட்பட அதிகாரிகள் பலர் புதிய அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
52 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
6 hours ago
22 Dec 2025