Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 25 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கல்குடாவில் தமிழ் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து, மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவுக்கு முன்னால், இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏறபாடு செய்திருந்த இவ் ஆhப்பாட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், என். ஸ்ரீநேசன், எஸ்.வியாழேந்திரன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாரடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா மாகாண அமைச்சர் ரி.துரைராஜசிங்கம் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பெருந்திரளானோர் இவ்வார்ப்பாட்டத்தில் பங்குகொண்டனர்.
கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பாகக் கடந்த புதன்கிழமை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான சசிதரன் மற்றும் நித்தியானந்தன் ஆகயோர் மீது கடுமையான தாக்குதல் மேறக்கொள்ளப்பட்டிருந்தது.
(படப்பிடிப்பு: ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.துசாந்தன், எஸ்.பாக்கியநாதன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
23 May 2025
23 May 2025