Editorial / 2023 ஜனவரி 05 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தைக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(05) விஜயம் செய்தார்.
அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுக்குறிப்பேட்டில் குறிப்பொன்றையிட்டதுடன்,
பதினாறாம் பெனடிக்ட் பரிசுத்தப் பாப்பரசரின் நினைவுப் புகைப்படத்திற்கு அஞ்சலியும் செலுத்தினார்.
இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையையும் சந்தித்து தனது இரங்களையும் தெரிவித்தார்.
ஜெர்மனியில் ஜோசப் ராட்ஸிங்கரில் பிறந்த திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் 2005 ஆம் ஆண்டு ஆண்டகை பதவிக்கு தெரிவானார்.இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட மிக வயதான திருத்தந்தை இவர் என்பது சிறப்பம்சம்சமாகும்.
இறைபதமேந்திய போது அவர் தனது 78 ஆவது வயதை பூர்த்தி செய்திருந்தார்.சுமார் எட்டு ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்தியதோடு,1415 இல் திருத்தந்தை கெரகெரி XII க்குப் பிறகு இராஜினாமா செய்த முதல் திருத்தந்தையும் இவராவார்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025